Skip to main content

தைராய்டு பிரச்னையா ......? இதுமட்டும் போதுமே.......!!

தைராய்டு பிரச்னை :

நம்மில் பலருக்கும் சுலபமாக வந்து விடுகிறது தைராய்டு பிரச்னை .இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இதிலிருந்து விடுபட, பல இயற்கை வழிகள் உள்ளது

தூதுவளை சூப்

தேவையானவை:

நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப்,

பெரிய வெங்காயம் - 1,

பூண்டு பல் - 5,

மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2, தக்காளி - 3,

தேங்காய்ப் பால் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு,

கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும் . இந்த சூப் செய்து தினமும் அருந்தி வந்தால், தைராய்டு பிரச்னை விரைவில் நீங்கும் .

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.