காய்ச்சல் வந்தாலே உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஒரு உயிருக்குள் இருந்து இன்னொரு உயிர் பிறந்து வெளியே வந்தால், அந்த உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்கள் ஆண்களுக்கு மேல் என்பதற்கான முக்கிய காரணமே அவர்களது தாய்மை தா
ன். வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய உதவும் சில பழங்கால இயற்கை வழிகள்! ஓர் குழந்தையை பெற்றுடுத்து நல்ல முறையில் வளர்ப்பதற்குள் அவள் படும் பாடு பெண்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். கருத்தரித்த ஆறாவது மாதத்தில் இருந்தே பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது குழந்தை பிறந்த ஆறு, ஏழு வாரங்கள் வரை தொடர்கிறது….. குழந்தையின்மை பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இயற்கை வைத்திய டிப்ஸ்!!
குழந்தை பிறந்த பிறகு பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
முடிக் கொட்டுதல்
குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களுக்கு பிறகு அதிகளவில் முடி உதிர்தல் காணப்படும். நாளுக்கு ஏறத்தாழ நூறு முடிகள் வரை கூட முடி உதிர்தல் ஏற்படலாம். இதுக் குறித்து கவலைப்பட வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான் இவை. இது விரைவாக சரியாகிவிடும்
சரும நிறத்தில் மாற்றம்
குழந்தை பிறந்த பிறகு அவரவர் நிறத்தில் இருந்து சற்று பழுப்பு நிற மாற்றம் காணப்படும். பிரசவக் காலத்தில் பருக்கள் பிரச்சனை இருந்திருந்தால் அது சரியாகிவிடும்.
மார்பக மாற்றங்கள்
மார்பகங்கள் சற்று பெரிதாக அல்லது மார்பகங்களில் புண் போன்றவை ஏற்படுலாம். மேலும், குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருந்தால் பால் வடிதல் பிரச்சனையும் வரலாம்.
வயிற்றில் மாற்றங்கள்
குழந்தை பிறந்த பிறகு கருப்பை கடினமாக உணரப்படும். சற்று உடல் எடையும் கூடியிருக்கும். இதெல்லாம் வயிறை சற்று உப்புசமாக அல்லது அசௌகரியமாக உணர செய்யும்.
இடுப்பு வலி
வயிற்று பகுதி தசைகள் சற்று இறுக்கமாக இருக்கும். மேலும், உடல் எடையும் அதிகரித்துக் காணப்படுவதால் இடுப்பு மற்றும் முது வலி ஏற்படும். பெரும்பாலும் ஆறு வாரங்களில் இவை எல்லாம் சரியாகிவிடும்
மலச்சிக்கல் கருத்தரித்து
இருக்கும் போதே மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கும். குழந்தை பிறக்கும் முன்பு வரை கருவின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனை இருந்திருக்கும். அது திடீரென இல்லாததால் சிறுநீர் கழித்தல், குடல் இயக்கம் போன்றவற்றில் கொஞ்சம் கோளாறு ஏற்படும். ஆனால், சில நாட்களில் இது சரியாகிவிடும்
பெண்ணுறுப்பு வலி
சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு பெண்ணுறுப்பு சற்று பெரியதாக காணப்படும். இதனால், வலி மற்றும் இரத்தக் கசிவு அவ்வப்போது ஏற்படும். ஒரு சில வாரங்களில் இது தானாக சரியாகிவிடும்
கால்களில் வீக்கம்
பிரசவ நாள் நெருங்கும் தருணத்தில் பெண்களின் கால்களில் வீக்கம் காணப்படும். குழந்தை பிறந்தவுடன் இந்த வீக்கம் குறைந்துவிடும். இதன் காரணமாக நடப்பதற்கு சற்று கடினமாக இருக்கலாம்.
வியர்வை
குழந்தை பிறந்த பிறகு, பெண்களுக்கு இரவு அளவிற்கு அதிகமாக வியர்வை வரும். பிரசவக்காலத்தில் உடலில் சுரந்த அதிக நீர் சுரப்பிகள் வெளிவர ஆரம்பமாவது தான் இதற்கு காரணம். ஆறு வாரங்களில் இது சரியாகிவிடும். மேலும், குழந்தை பிறந்த பிறகு பெண்களிடத்தல் உடற்சக்தி கொஞ்சம் அதிகரித்து காணப்படும்.