இளநரை கருப்பாக

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில்
பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கொத்தமல்லலி - சிறிதளவு
நெல்லி வற்றல் - 10 கிராம்
வெட்டிவேர் - 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.


◾கறிவேப்பிலை நன்றாக அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் இளநரை போயி போய்விடும்

◾ கசகசா 100 கிராம், அதி மதுரம் 100 கிராம் கலந்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு, குளிக்கும் முன் பசும்பாலில் பொடியை கலந்து தலைக்கு தடவி, அரை மணி நேரம் கழித்து தொடர்ந்து குளித்து வந்தால், நரை முடி கறுப்பாகும்

◾ தாமரைப்பூ கஷாயம் தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரைமுடி கறுப்பாகும்.

◾நெல்லிக்கையை காயவைத்து, பவுடர் ஆக்கி, எண்ணெயுடன் கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை போகும்.

◾முளைக்கீரை ஒரு நல்ல நரைமுடி கருப்பாக உதவும் கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்

◾ செம்பருத்தி பூ, ஆலமரத்தின் கொழுந்து மற்றும் வேர் ஆகியவற்றை போடி செய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர, நரைமுடி நன்றாக கருப்பாக வளரும்.
Share on Google Plus

About DOOZY STUDY

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.