Monday, May 23, 2016

ஆன்ராயிடு போனில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோ-களை கன்வர்ட் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எம்முடைய போனில் வீடியோ ஆடியோ போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை சேமித்து வைத்து இருக்கிறோம். ஆகவே இன்றைய எமது பதிவிலே உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ உடன் சம்மந்தப்பட்ட ஒரு கன்வர்டர் செயலி பற்றி பார்ப்போம்.


இதற்கு மிக முக்கிய காரணம், அனைத்து வீடியோ போர்மட்-களும் எல்லாருடைய ஸ்மார்ட் போனிலும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. ஒரு சில ஸ்மார்ட் போன்களில் MP4 அல்லது AVI போன்ற போர்மட்-களை கொண்ட வீடியோ மட்டுமே வேலை செய்யும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு பிடித்த வீடியோவை போனில் இருந்தபடியே பார்க்க முடியாமல் போகிறது.


ஆகவே இன்று உங்களுடைய, வீடியோ பைல் ஒன்றை ஆடியோ ஆக,வீடியோ பைல் ஒன்றில் இருக்கும் போர்மட்-ஐ வேறு ஒரு போர்மட்-இற்கு மாற்ற என்று பல்வேறு பயனுள்ள வசதிகளை தரும் ஆன்ராயிடு கன்வர்டர் செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.


ஆகவே இந்த செயலி மூலம் உங்களுடைய குறித்த ஒரு வீடியோ பைல்-ஐ உங்கள் தேவைக்கு ஏற்ற போல கன்வர்ட் செய்து கொள்ள முடியும்.

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு கன்வர்டர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.

அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து Add Media என்பதை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான வீடியோ/ ஆடியோ பைல்-ஐ தெரிவு செய்யுங்கள். 



இப்போது உங்களது தேவைக்கு ஏற்ற போல போர்மட்-களை தெரிவு செய்து மிக இலகுவாக உங்களது வீடியோ/ ஆடியோ பைல்-களை கன்வர்ட் செய்து கொள்ள முடியும்.









மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்தபடியே உங்களது வீடியோ மற்றும் ஆடியோ பைல்-களை கன்வர்ட் செய்து கொள்ள உதவும் இந்த கன்வர்டர் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகபடியான விளம்பரங்கள் காணப்படுகின்றன.