Monday, May 23, 2016

'பென்டிரைவ் கணனியால் இனம்காணப்படவில்லை' என்று வரும் பிழை செய்தியை திருத்துவது எப்படி?

பென்டிரைவ்-களை நாம் கணனியில் பயன்படுத்தும் போது சில வேலை குறித்த பென்டிரைவ் கணனியால் சரியாக இனம்காணப்படவில்லை என்ற பிழை செய்தி வருவதை அவதானித்து இருப்பீர்கள். இவ்வாறான பிழை செய்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதில் மிக முக்கியமான ஒரு காரணமாக உங்களது பெண்டிரைவ் ஏதேனும் ஒரு காரணத்தினால் உடைந்து/ பாதிக்கப்பட்டு இருப்பை குறிப்பிடலாம். இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் குறித்த பெண் டிரைவ்-ஐ மீட்டெடுப்பது சிரமமான காரியம். ஆனால் இந்த பிழைச்செய்தி வேறு பல காரணங்களினாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே இவ்வாறான பிழை செய்தி ஒன்று உங்களது பெண்டிரைவ்-ஐ கணனியில் இணைக்கும் போது ஏற்பட்டால் எவ்வாறு பெண்டிரைவ்-ஐ சரி செய்வது என்று பார்ப்போம்.






முதலாவதாக உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இணையுங்கள்.


அடுத்து உங்களது கணனியின் run மெனு-வை ஆரம்பித்து அதிலே devmgmt.msc என்று டைப் செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.






இப்போது உங்களது கணனியின் டிவைஸ் மனேஜர் ஆரம்பிக்கப்பட்டு அங்கே உங்களது கணனியில் இணைக்கப்பட்டி இருக்கும் அனைத்து டிவைஸ்-களும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.

அங்கே universal serial bus controllers என்பதை திறந்து அங்கே எரர் அடையாளத்துடன் இருக்கும் unknown USB device என்று இருப்பதை ரைட் கிளிக் செய்து,






அப்டேட் டிரைவர்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.








மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றியும் உங்களது பெண்டிரைவ் கணனியால் இனம்காணப்படவில்லை என்றால், மறுபடியும் மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றி Unknown USB device-ஐ ரைட் கிளிக் செய்து uninstall என்பதை கிளிக் செய்து விட்டு மறுபடியும் reinstall என்பதை கிளிக் செய்யுங்கள்.






அவ்வளவு தான்..! இப்போது உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பெண் டிரைவ்-ஐ கணனியில் இணைத்து பாருங்கள். இப்போது உங்களது பெண் டிரைவ் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கணனியில் காண்பிக்கப்படும்.