Monday, May 23, 2016

விண்டோஸ் கணனிகளில் ஏற்படும் ரெஜிஸ்ட்ரி பிழைகளை சரி செய்வது எப்படி?

கணணி அல்லது மடிக்கனணிகளை பயன்படுத்தும் நாம், பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்தி வருகிறோம். 

உங்களது விண்டோஸ் கணணி வைரஸ் தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினால் சரியாக இயங்காமல் போகலாம்.

விண்டோஸ் கணனிகளில் இயங்குதளத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக விண்டோஸ் இயங்குதள ரெஜிஸ்ட்ரி பாதிக்கப்பட்டிருப்பதை குறிப்பிடலாம்.

ஆகவே இன்றைய பதிவிலே எமது விண்டோஸ் கணனிகளின் ரெஜிஸ்ட்ரி-யில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர்-ஐ உங்களது கணனிக்கு பெற்றுகொல்லுன்கள்.

அடுத்து இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பித்து, அதிலே ரெஜிஸ்ட்ரி என்று இருப்பதை கிளிக் செய்து அங்கே காணப்படும் அனைத்து டிக்-களையும் செயட்படுத்துங்கள்.

அடுத்து, ஸ்கேன் என்பதை கிளிக் செய்யுங்கள்.




இப்போது உங்களது கணனியில் இருக்கும் அனைத்து விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பிரச்சினைகளும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.







அதிலே 'பிக்ஸ்' என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது விண்டோஸ் கணனியில் காணப்படும் அனைத்து ரெஜிஸ்ட்ரி பிழைகளையும் சரி செய்து கணணியை சீராக இயங்க வைக்க முடியும்.

ஆகவே மிக இலகுவாக விண்டோஸ் கணனிகளில் ஏற்படும் ரெஜிஸ்ட்ரி பிரச்சனைகளை சரி செய்து கொள்ள உதவும் இந்த மென்பொருளை இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பிழைகளை திருத்துவது தவிர, நீக்க முடியாத மென்பொருட்களை கணனியில் இருந்து நீக்குவது, கணனியின் ஹார்ட் டிஸ்க்-ஐ பராமரிப்பது என்று மேலும் பல பல்வேறு பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த அருமையான மென்பொருள்.