Wednesday, April 20, 2016

எந்தெந்த நேரத்தில என்னென்ன உணவு சாப்பிடணும், சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா?

தகுந்த காலத்தில், நேரத்தில் உட்கொள்ளும் வரையிலும் அனைத்து உணவுகளும் சிறந்த உணவுகள் தான். 

குளிர் காலத்தில் குளிர்ந்த உணவுகளை உட்கொண்டால் உடல்நல பாதிப்புகள் உண்டாக தான் சேரும். குளிர்ந்த தன்மை உள்ள உணவுகளை கோடையில் உட்கொள்வது தான் சிறந்தது. 


உணவுகளை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என இனிக் காண்போம்....

பால் 

காலை நேரத்தை விட, இரவில் பால் அருந்துவது தான் சிறந்தது என டயட்டிஷியன்கள் கூறுகின்றனர். ஏனெனில், இது செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும், இரவு பால் அருந்துவது உடலை இலகுவாக உணர செய்யும். இதனால் நல்ல உறக்கமும் கிடைக்கிறது.

கிரீன் டீ 

இன்றைய ஆரோக்கிய பிரியர்கள் அனைவரும் கிரீன் டீ பருகும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். அதிகாலை எழுந்ததும் இதை குடிக்க வேண்டாம். மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பருகலாம் என கூறப்படுகிறது. மேலும், ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் கிரீன் டீ பருகுவதை தவிர்த்து விடுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

சாதம்

 இரவு நேரம் சாதத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள் என டயட்டிஷியன்கள் கூறுகின்றனர். இது குமட்டல் உண்டாகவும், உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.

தயிர் 

ஆயுர்வேத முறையில் தயிரை இரவில் உட்கொள்ள வேண்டாம் என குறிபிடப்பட்டுள்ளது. இது உடலில் அசிடிட்டி உண்டாக காரணியாக இருக்கிறது. இதற்கு பதிலாக மதிய வேளையில் சேர்த்துக் கொள்வது சிறந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.


காபி 

இரவில் காபி பருகுவது செரிமான மண்டலத்தின் செயற்திறனை கெடுக்கிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் இரவு காபி குடிப்பது உடல் அசௌகரியத்தை உண்டாக்குகிறது

ரெட் ஒயின் 

மாலை மற்றும் இரவு உணவருந்தும் போதும் ஒரு கிளாஸ் ரெட் ஒயினை குடிப்பது சிறந்ததாம். இது ஆய்வுகளிலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு ஜூஸ் 

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் டி சத்து, ஃபோலிக் அதிகம். காலை வேளையில் இதை பருகுவது உடற்சக்தியை அதிகரிக்க உதவுகிறதாம்.

டார்க் சாக்லேட்

இரவு நேரத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இரத்த அழுத்தம் குறையவும், மனநிலை மேம்படவும் சிறந்த முறையில் உதவுகிறதாம்.

பிஸ்தா

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவு பிஸ்தா. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், பயோட்டின் போன்றவைகள் மிகுதியாக இருக்கின்றன. இது செரிமனாம் சீராக உதவுகிறது. மேலும், இது இரவு அதிக உணவு உட்கொள்வதை தடுக்கிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க உதவுகிறது பிஸ்தா.

பழங்கள் 

வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து, ஃபோலிக் சத்துக்கள் நிறைந்துள்ள பழங்களை பகல் நேரத்தில் உட்கொள்வது தான் சிறந்தது என டயட்டிஷியங்கள் கூறுகின்றனர்.