Sunday, March 27, 2016

ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக மாற்றி கணனிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் எப்படி?

ஜிமெயில் கணக்கு ஒன்றின் மூலம் உங்களது ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக மாற்றி மற்றுமொரு போனுக்கு அல்லது கணனிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் எப்படி?

இன்றைய பதிவில் மற்றுமொரு மிகச்சிறந்த கண்காணிப்பு கேமரா சம்மந்தப்பட்ட விடயமொன்றுடன் உங்களை சந்திக்கின்றேன். எமது தளத்தில் ஏற்கனவே உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படியெல்லாம் ஒரு கண்காணிப்பு கேமரா ஆக மாற்றி பாதுகாப்பு சம்மந்தமான விடயங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தேன். அந்த பதிவுகளை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.


சரி.. இன்றைய பதிவிலும் இதே மாதிரியான மற்றுமொரு உபாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது உங்களுடைய ஆன்ராயிடு போனை இரு முறைகள் மூலம் கண்காணிப்பு கேமரா ஆக பயன்படுத்துவது எப்படி என்பதாகும்.

முதலாவதாக உங்களது போனில் இருந்து கேமரா மூலம் ஒளிபரப்பப்படும் வீடியோவை இன்னுமொரு போனில் நேரடியாக ஒளிபரப்புவதும், அதே போல் அடுத்து கணணி ஒன்றில் நேரடியாக ஒளிபரப்புவது எப்படி என்பதுமாகும்.

இந்த அனைத்து வேலைகளையும் மிக இலகுவாக உங்களது ஜிமெயில் கணக்கு ஒன்றின் மூலம் செய்து கொள்ள முடியும்.


சரி. எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக மாற்ற கூடிய சிறப்பு செயலியை உங்களது போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.





அடுத்து தோன்றும் திரையில் என்பதை Camera தெரிவு செய்து, Next என்பதை கிளிக் செய்யுங்கள்.










அடுத்து தோன்றும் திரையில் உங்களது ஜிமெயில் கணக்கு ஒன்றை தெரிவு செய்து லொகின் செய்யுங்கள்.








மேலே காட்டியிருப்பது போல் Save Power என்பதை தெரிவு செய்வதால் உங்களுடைய போன் ஸ்க்ரீன் லாக் ஆகி விடும். ஆகவே போன் பேட்டரி சார்ஜ்-ஐ முடிந்தவரை சேமித்து கொள்ள முடியும்.





சரி.. இப்போது நீங்கள் உங்களது போனில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வீடியோவை இன்னுமொரு ஆன்ராயிடு போன் மூலம் பார்க்க வேண்டும் என்றால் குறித்த செயலியை அந்த ஆன்ராயிடு போனிலும் நிறுவ வேண்டும். நிறுவும் போது Viewer என்பதை தெரிவு செய்ய வேண்டும்.








அடுத்து வீடியோ ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஆன்ராயிடு போனில் லொகின் செய்த அதே ஜிமெயில் கணக்கு மூலம் இந்த போனிலும் லொகின் செய்வதால், மிக இலகுவாக முதலாவது ஆன்ராயிடு போனில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வீடியோவை இரண்டாவது ஆன்ராயிடு போன் மூலம் பார்த்து கொள்ள முடியும்.




ஆன்ராயிடு போன் மூலம் இல்லாமல் கணணி ஒன்றின் மூலம் குறித்த லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால், உங்களது லைவ் ஸ்ட்ரீமிங் நடந்து கொண்டிருக்கும் ஆன்ராயிடு போனில் காட்டப்படும் குறித்த தளத்திற்கு, உங்களது கணனியில் பயர்பாக்ஸ் உலாவி மூலம் சென்று, குறித்த ஜிமெயில் கணக்கிற்கு லொகின் செய்வதன் மூலம், கணனியில் இருந்து கூட லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவை பார்க்க முடியும்.








ஆகவே கணணி ஸ்மார்ட் என்று அனைத்திற்கும் வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.





குறிப்பு 


உங்களது போனில் இருந்து வீடியோவை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய வேண்டும் என்றால், உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த உபாயத்தை எந்த விதமான தவறான காரியங்களுக்கும் பயன்படுத்த வேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.