Wednesday, June 4, 2014

பாஸ்தாக்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா

தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா. தற்போது இந்த பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான 
உணவுகளில் ஒன்றாக உள்ளது. 

அதிலும் பாஸ்தாக்களை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்த சமைத்து சாப்பிட்டால், அது வயிற்றை நிரப்பிவிடும். ஆனால் இந்த பாஸ்தாக்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும். பாஸ்தாக்களில் நிறைய வகைகள் உள்ளன.

மேலும் பாஸ்தாக்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி மற்றும் போலிக் ஆசிட் போன்றவை நல்ல அளவில் உள்ளன. இருப்பினும் கடைகளில் விற்கப்படும் பாஸ்தாக்கள் ஆரோக்கியமற்றது. மாறாக வீட்டில் தயாரிக்கப்படும் பாஸ்தாக்களை சாப்பிடுவது நல்லது. 

மேலும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதால், உண்ணும் உணவுகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பாஸ்தா கெட்டதா என்று கேட்கலாம். 

ஆனால் அதற்கான சரியான விடை, எந்த பாஸ்தாவை சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் மற்றும் எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் சொல்ல முடியும். பாஸ்தாவில் கர்ப்பிணிகளுக்கு தேவையான நிறைய சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அளவாக உட்கொண்டால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. 

இருப்பினும் அதிகமாக சாப்பிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பாஸ்தாவில் ஜிங்க் மற்றும் மக்னீசியத்தை உடலானது உறிஞ்சுவதைத் தடுக்கும் பொருளான பைடேட்ஸ் உள்ளது. 

அதுமட்டுமின்றி, அதில் ஜங்க் உணவுகளில் உள்ள பொருட்கள் இரத்தத்தில் எளிதில் கலக்குமாறான லெக்டின்ஸ் என்னும் பொருளும் உள்ளது. அதற்காக இது முழுவதும் ஆரோக்கியமற்றதாக, அறவே தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. 

கர்ப்பிணிகள் ஆசைப்பட்டால், அளவாக ஒருமுறை மட்டும் சாப்பிடலாம். பாஸ்தாவானது உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே இதனை தினமும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

பாஸ்தா மிகவும் பிடிக்குமானால், இதனை கர்ப்ப காலத்தில் அளவாக சாப்பிடுங்கள். பாஸ்தாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இது வயிற்றில் வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.