Saturday, June 14, 2014

வறண்ட கூந்தலை வழமாக்க

நண்பரகளே உங்கள் பள்ளியில் காலிபணியிடம் உள்ளதா ? ஆம் என்றால் பள்ளி அமைந்துள்ள இடம் மற்றும் மாவட்டத்தை தெரிவிக்கவும்
* வெளியூர்களுக்கு சென்று வந்தாலே சிலருக்கு முடி செம்பட்டை நிறத்தில் மாறி, மென்மையை இழந்துவிடும். இதுபோன்ற நேரத்தில் முடியில் படியும் செம்பட்டையை நீக்கி, கூந்தலைப் பளபளப்பாக்குகிறது திராட்சை.

* கருநீலத் திராட்சையின் தோலை மட்டும் எடுத்து விழுதாக்குங்கள். வெந்தயத்தையும் கடலைப் பருப்பையும் முந்தின நாள் இரவே சம அளவு ஊற வைத்து, மறுநாள் அவற்றை நைசாக அரைத்து விழுதாக்குங்கள். 

இரண்டு விழுதையும் சம அளவு கலந்து, தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். தலைமுடியின் உண்மையான நிறம் திரும்புவதுடன், பளபளப்பும் அதிகரிக்கும். இதை பவுடராகவும் செய்து வைத்துக் கொள்ளலாம். 

திராட்சைத் தோலை உலர வைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயப்பொடி, கடலைமாவு கலந்து வைத்துக் கொண்டால் தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம். 

* தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது திராட்சைக் கொட்டை. திராட்சைக் கொட்டைகளை உலர்த்தி பவுடராக்குங்கள். 50 கிராம் வெந்தயம், ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளுங்கள். 

இதனுடன் 50 கிராம் திராட்சைக் கொட்டைப் பவுடரை சேருங்கள். நல்லெண்ணெயை காய்ச்சி, இந்தக் கலவையில் ஊற்றி பேஸ்ட்டாக குழையுங்கள். லேசான சூட்டில் தலைக்குத் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். 

* தலைமுடியின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது. இந்த திராட்சைக் கொட்டைப் பவுடர் நல்லெண்ணெய், வெந்தயப்பொடி, திராட்சைக் கொட்டைப் பவுடர், கடலைமாவு இவற்றை சம அளவு கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது கொதிக்கும் நீரை சேர்த்து பேஸ்ட்டாக்குங்கள். சீயக்காய்க்குப் பதிலாக இந்தப் பேஸ்ட்டை தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள். வறண்ட கூந்தல், பஞ்சுபோல மிருதுவாவதுடன், பளபளப்பும் கூடும்.