Thursday, May 15, 2014

பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது, அவர்களின் கையில் தயாராக ஒரு பை இருக்க வேண்டும். 
 அவற்றில் என்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மருத்துவ கோப்புகளை கண்டிப்பாக தவற விடக்கூடாது.

பிரசவத்திற்கு முன்பாக கடைசியாக நீங்கள் சோதனைக்காக சென்று வந்த வரையிலான அனைத்து
கோப்புக்களையும் உங்கள் பையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். லூசாகவும் மென்மையாகவும் உள்ள ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை மருத்துவமனை வழங்கினாலும் கூட, கையில் கூடுதலாக வைத்துக் கொள்வது நல்லதே.

பிரசவம் நடக்க வேண்டி நடை கொடுக்கும் போதோ உங்களுக்கு பயன்படும். வலியால் நீங்கள் அழும் போது உங்கள் பாதங்கள் குளிர்ந்து விடும். தட்பவெப்பநிலை இனிமையாக இருந்தாலும் இது ஏற்படும். அதனால் உங்கள் கணவர் அல்லது மருத்துவமனை செவிலியரை உங்களுக்கு காலுறைகள் அணிய உதவி செய்திட சொல்லுங்கள்.

பிரசவத்தின் போது அது உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தினால், மீண்டும் அவர்களின் உதவியோடு அதனை கழற்றி விடுங்கள். தட்டையான, லேசான காலணிகளை எடுத்து கொள்ளுங்கள். மருத்துவமனையில் நடக்கும் போது போட வசதியாக இருக்கும். நீங்கள் எப்போதும் அணியும் உள்ளாடைகளை ஒதுக்கி வைத்து விட்டு, காட்டன் உள்ளாடைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

கடைசி நிமிடத்தில் வாங்கும் போது குழப்பங்கள் ஏற்படும். அதனால் முதலிலேயே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணியும் அளவை விட அடுத்த அளவை தேர்ந்தெடுங்கள். ஒரு வேளை சிசேரியனாக இருந்தால், பெரிதாக இருக்கும் உள்ளாடை உங்கள் புண்களை அதிகமாக உரசாது.

பெரிய டையப்பர் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு இரவும் பகலும் அடிக்கடி டையப்பர் மாற்ற வேண்டி வரும். உங்கள் குழந்தையின் சருமத்தில் டையப்பர் பட வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், வீட்டில் தயார் செய்த காட்டன் பேட்களை எடுத்துச் செல்லுங்கள்.