Thursday, May 15, 2014

காரசாரமான மிளகு குழம்பு

சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள், உப்பு
கறிவேப்பிலை
வறுத்து அரைக்க:
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தனியா - ஒரு மேசைக்கரண்டி
வதக்கி அரைக்க:
தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 2 பல்
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கு
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
பெருங்காயம் - கால் தேக்கரண்டி

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும்.


பின் இன்னும் சிறிது எண்ணெய் விட்டு தேங்காயை வதக்கவும்.


பின் வெங்காயம் மற்றும் பூண்டு வதக்கி எடுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து அத்துடன் தேங்காய், வெங்காயம், பூண்டும் சேர்த்து அரைத்து தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.


பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.


வதங்கிய வெங்காயத்துடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சுவையான மிளகு குழம்பு தயார்.